சினிமாவெள்ளித்திரை

சர்வதேச இந்திய திரைப்பட விழா : நடிகர் சிரஞ்சீவிக்கு விருது!

திரைப்பட விழா

ஆசியாவின் மிக பெரிய திரைப்பட விழாவான 53-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். இந்நிகழ்ச்சியில் இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். அந்த வகையில் ஹிந்தி நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திரைப்பட ஆளுமை விருது

இந்நிலையில், இந்த விழாவில், நடிகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என 150 திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர் சிரஞ்சீவி நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

Related posts