வாரிசு படம்
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெளியீட்டு உரிமை
இதனிடையே இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Let the festival begin 🎉🔥
Happy to be associated with #Varisu for Tamil Nadu theatrical release! 🔥
Thanks to #Thalapathy @actorvijay
Sir, Dil Raju Sir, @SVC_official @directorvamshi @Jagadishbliss #VarisuPongal https://t.co/ToPtqZHOhj— Seven Screen Studio (@7screenstudio) November 20, 2022

