ஹிந்தி படம்
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. தமிழில் மொழி, 36 வயதினிலே, காற்றின் மொழி, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். மேலும், தெலுங்கு மலையாளம் படங்களிலும் நடித்துள்ள இவர் 1998-ம் ஆண்டு வெளியான ‘டோலி சஜா கே ரக்கீனா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து 2001-ம் ஆண்டு வெளியான ‘லிட்டில் ஜான்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிகை ஜோதிகா ஹிந்தியில் நடிக்கவில்லை.
தற்போது ஜோதிகா மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகை ஜோதிகா 21 ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

