சினிமாவெள்ளித்திரை

விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரிலீஸ் தேதி

மாமனிதன் படத்தை அடுத்து விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அனு கீர்த்திவாஸ் கதாநாயகியாக நடிக்க, பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், ‘டிஎஸ்பி’ படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Related posts