இரண்டாவது சிங்கிள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஃபர்ஹானா’. இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ஃபர்ஹானா படத்தின் ‘சாரா’ எனும் இரண்டாவது பாடல் வருகிற டிசம்பர் 12-ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

