வைரல் புகைப்படம்
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. இவர் ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் ஹிந்தியில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து குங்பூ யோகா, ராதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தற்போது அவர் ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில். நடிகை திஷா பதானி கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Disha Patani (@DishPatani) December 7, 2022

