Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, June 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»பூக்கி: திரைப் பார்வை – தற்காலத் தலைமுறையின் ‘பிரேக் அப்’ தாண்டவம்!

பூக்கி: திரைப் பார்வை – தற்காலத் தலைமுறையின் ‘பிரேக் அப்’ தாண்டவம்!

February 14, 20264 Mins Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஓர் அசலான சினிமாவைச் சம காலத்தின் கண்ணாடி எனலாம். அந்த வகையில், 2k மற்றும் GenZ, GenAlpha தலைமுறையினர் உறவுகளைக் கையாள்வதில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் மற்றும் போதாமைகளை, இந்த ‘பூக்கி’ துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.

குறிப்பாகப் படத்தின் மையச் சிக்கலை, நுணுக்கமாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறது. ‘சலீம்’ படத்தில் தொடங்கி, ஒளிப்பதிவுக்காகக் கவனிக்கப்பட்டு வந்த கணேஷ் சந்திரா, தன்னையொரு துடிப்பான இயக்குநராகவும் இப்படத்தின் வழியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.

தற்காலத் தலைமுறையின் காதலில் மலிந்திருக்கும் வீம்புகள், வெட்டி ஈகோ வெடிப்பாக மாறுவது, அதனால் ஏற்படும் பிரிவுக்குப் பிந்தைய பொய்யான வாழ்க்கை ஆகியவற்றை, லைட்- ஹார்ட்டட் பாணியில், அதே சமயம் காதல் மற்றும் சமூக அரசியல் தெளிவோடு சிறந்த பொழுதுபோக்குப் படமாகத் தந்திருக்கிறார்.

இதற்கு அவருக்குப் புதிய பரிதியின் திரைக்கதை மற்றும் கதாபாத்திர எழுத்து எவ்வாறு கைகொடுத்தது? விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பு – இசை, நடிகர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் எப்படி அமைந்தன என்று எடைபோட்டுப் பார்க்கலாமா?

படித்து வேலையிலிருக்கும் கைலாஷ் – ஆழி இருவரும் 6 வருடமாகக் காதலர்கள். வாழ்வில் இணையும் நோக்குடன் மோதிரங்களைப் பரிமாறிக்கொண்டவர்கள். ஆனால், கைலாஷின் ஆளுமையில் இருக்கும் ஒரு சிக்கல் அவனது முன்கோபம். அது அவனைப் பொது இடங்களில் எடுத்ததும் கைநீட்டும் ஒரு ‘ஹெபிச்சுவல் அப்யூஸர்’ ஆக வைத்திருக்கிறது. கைலாஷ் மீது மலையளவு காதல் இருந்தாலும் அவனது இந்தக் குணத்தை ஆழி கடுகளவும் விரும்பவில்லை.

ஒருநாள் மக்கள் கூடியிருக்கும் பொது இடத்தில், ஒரு சிறுமி பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவளுடைய தந்தையை ஓங்கி அறைந்துவிடுகிறான் கைலாஷ். அந்தச் சூழ்நிலையில் அவனைக் கட்டுப்படுத்த ஆழி எடுக்கும் அந்த ஒரு முடிவு, அவர்கள் இருவருக்கும் இடையிலான ஒரு பெரும் போரின் தொடக்கமாக மாறி, 6 ஆண்டு காதலை ‘பிரேக்-அப்’ என்கிற உணர்ச்சிகரமான திருப்பத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அந்த ‘பிரேக் – அப்’பை அவர்களால் ஜீரணிக்க முடிந்ததா? ஒருவரை ஒருவர் மறக்க அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள்? அது அவர்களை எந்த எல்லைக்குக் கொண்டு சென்றது என்பது கதை.

காதலைச் சொல்லாமல் மனதில் ஒளித்து வைத்துக்கொண்டு வாழ்நாளெல்லாம் வலியைச் சுமப்பதுபோலவே, காதலர்களாக இருந்து பிரிந்த பிறகான வலியைச் சுமப்பதும் அதைக் கடந்து வரப் போராடுவதும் ஒரு காதல் திரைப்படத்துக்கான கதைக்குப் பெரும் ஊக்கிதான். அதை GenZ தலைமுறையின் தற்கால வாழ்க்கைக்குள் அழகாகப் பொருத்தி, இந்தக் கதையையும் அதற்கான திரைக்கதை வசனத்தையும் எழுதியிருக்கிறார் புதிய பரிதி.

டிஜிட்டல் உலகில் மூழ்கி, நுகர்வுக் கலாச்சார வாழ்வில் திளைத்து அல்லல்படும் தற்காலத் தலைமுறையின் வாழ்க்கைமுறையை, நகைச்சுவையும் உணர்வுகளும் பின்னிப் பிணைந்த ‘ரோலர் கோஸ்டர்’ ஆக இப்படத்தின் திரைக்கதையை எழுதி அட்டகாசம் செய்திருக்கிறார். புதிய பருதி, தமிழ் சினிமாவுக்கு ஒளி பாய்ச்சப்போகும் திறமையான புதிய வரவு என்பதை அறிமுகப் படத்திலேயே காட்டிவிட்டார்.

இதையும் படிக்க :  ஆஸ்கர் போட்டியில் களமிறங்கிய காந்தாரா!

அவரைப் பாராட்டுவது போலவே, ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகத் தன் திறமையைக் காட்டியபிறகு, இயக்கம் என்று வரும்போது, தன்னுடைய சொந்தக் கதையைப் பிடித்துக்கொண்டு தொங்காமல், ஒரு திரைக்கதை எழுத்தாளரைப் பயன்படுத்துவோம் என்று முன்வந்த காரணத்துக்காகவே இப்படத்தின் ஒளிப்பதிவாளர், இயக்குநர் (மேக்கிங்கிலும் திரைமொழியிலும் மிரட்டியிருக்கிறார்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு: கைலாஷ் – ஆழியின் 6 வருட காதல் முன்கதையை, அவர்கள் மாற்றிக்கொண்ட மோதிரம் வீதியில் சிதறும்போது அது சுழல்வதுபோல் காட்டி, சுழலும் அந்த மோதிரத்தின் வட்டத்துக்குள் சில ப்ளாஷ் கட் ஷாட்களை ‘ஹைக்கூ’வாக காட்டியது).

எழுத்தாளர், இயக்குநர் எப்படி முதன்மை பலமோ, அவர்களுக்கு இணையாக விஜய் ஆன்டனியின் பங்களிப்பும் அபாரம்! கடந்த 20 வருடங்களாக இசையமைத்து வரும் அவர், கணேஷ் சந்திராவின் திறமையைக் கண்டறிந்து, அவரை இயக்குநராக அறிமுகப்படுத்தியிருப்பதுடன், அந்தப் படத்துக்கு நவீனம் நிரம்பி வழியும் துள்ளலும் துடிப்புமான கதைக்களத்துக்குப் பொருத்தமான இசையை வழங்கியிருக்கிறார். தவிர, படத்தின் படத்தொகுப்பிலும் மீண்டும் தன் திறமையைக் காட்டியிருக்கிறார்.

பிரேக் – அப் நிகழும் காட்சியை ‘ஸ்டேஜிங்’ செய்த விதமும் அதிலிருக்கும் ‘எமோஷ’னை கடைசிக் காட்சி வரையிலும் நீடிக்க வைத்திருப்பதும் இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. பிரிவுக்குப் பிறகு கைலாஷும் ஆழியும் தங்கள் பிரிவு தரும் வலியிலிருந்து தங்களை மீட்டெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகள் தான் படத்தின் ஆகச்சிறந்த பகுதிகள்.

ஜிம்முக்குச் சென்று தசைகளை வளர்ப்பதன் மூலம் மீள முயல்வது, கடனில் வாங்கிய விலையுயர்ந்த பைக்கில் ‘ரோட் டிரிப்’ செல்வது என அவனது எக்ஸ்கேபிசம் படும் பாடும் அதற்குள் வரும் புதிய மனிதர்கள், மனக் குரலில் பேசும் பூனைகள், நாய்கள் என எள்ளல் கலந்த கேலிச்சித்திரம்போல் பெரும் நகைச்சுவை திருவிழாவாக மாறிவிடுகிறது.

ஆழியோ, காதலை மறந்து கடந்துபோக, ஸ்ட்ரெஸ் ஈட்டிங், ஸ்ட்ரெஸ் ஷாப்பிங் என்று பொருட்கள் மற்றும் ஜங் உணவுகளில் புகலிடம் தேடும் அவளது போராட்டம், இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தின் மீதான நிதர்சன நையாண்டி. இவற்றையெல்லாம் முயன்று பார்த்தபின் அவள் ‘இன்னர் பீஸ்’ தேடி எப்படிப்பட்ட ஒரு ஆன்மிக குருவிடம் கொண்டுபோய் சேர்க்கிறாள் என்பது முந்தைய முயற்சிகளைவிட செம்ம சட்டையர்!

ஆன்மிக குருவாக வரும் சுனில் நடிப்பும் 200 கோடி மேட்டரில் அவர் தன் சிகையை பிய்த்துப் போடுவதும் இவ்வகை ஆன்மிகம் எப்படிப்பட்ட ‘தலைமுடி’ என்பதைப் பட்டவர்த்தனப்படுத்திவிடுகிறது. சில காட்சிகளே வந்தாலும் சுனில் நடிப்பு அவ்வளவு கச்சிதம். அதேபோல், கைலாஷின் ஜிம் கோச் ஆக வரும் கதாபாத்திரம் (பிக்பாஸ் சத்யா) உள்படத் துணைக் கதாபாத்திரங்களுக்கும் முழுமையைக் கொடுக்க முயன்று அதில் வெற்றிபெற்றிருக்கிறார் படத்தின் எழுத்தாளர் புதிய பரிதி.

இதையும் படிக்க :  கஞ்சா பூ கண்ணால - பாடலாசிரியர் பகிரங்க மன்னிப்பு !

வாயளவில் பிரிந்துவிட்டோம் என்று சொல்லிக்கொண்டாலும், மனதளவில் கைலாஷும் ஆழியும் ஒருவரை ஒருவர் விட்டு விலக முடியாமல் அல்லாடும் ஓராண்டுக் காலத் தவிப்பு, திரையரங்கில் இருக்கும் நியுஜென் பார்வையாளர்களை மட்டுமல்ல; எந்த வயதுப் பார்வையாளர்களையும் உறுதியாக ‘கனெக்ட்’ செய்துவிடும்.

வழக்கமான ‘மெலோ-டிராமா’ பாணியில் செல்லாமல், புதிய தலைமுறைக் காதலின் ஒரு சீரியஸான பிரச்சினையை, காட்சிக்குக் காட்சி இழைத்திருக்கும் மேக்கிங் மூலம் பொழுதுபோக்குத் தன்மை குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக, குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை உபதேசமாகச் சொல்லாமல், அந்தத் தலைமுறையினர் தாங்களாகவே அதை உணரும்படி வடிவமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

வீடு வாங்குவதெல்லாம் ஒரு கனவாக இருக்க முடியாது என்று அலட்சியப்படுத்திவிட்டுச் செல்லும் கைலாஷ், வீடு வாங்குவது ஒரு குடும்பத்தின் ஆயுள் கால அடையாளம் என்பதை உணரும் தருணம் படத்தின் மிக மேன்மையான கட்டம். புதிய வீட்டுக்குள் அடிவைக்கும் பாண்டியராஜனின் நடிப்பு செம்ம கிளாஸ் ரகம். அவரது மனைவியாக வரும் இந்துமதி மணிகண்டனோ அவ்வளவு இயல்பு. மனநல மருத்துவராக வரும் லட்சுமி மஞ்சு, கைலாஷின் நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர் என அனைவரும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

’மார்கன்’ திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடிப்பிலும் ஆக்‌ஷனிலும் கவர்ந்த அஜய், நாயகன் கைலாஷாக நம்பகமான நடிப்பைத் தந்திருக்கிறார். அவரது காதலி ஆழியாக வரும் நாயகி தனுஷாவின் நடிப்பும் துருதுருப்பும் சிறப்பு. ‘வலியை ஜெயிக்கிற ஒரே வழி அதை எதிர்கொள்வதுதான்’ என்று வழிகாட்டும் ராகுல் கதாபாத்திரம், நாயகனை விடத் தேடலும் தெளிவும் தீர்க்கமும் கொண்டவனாக இருப்பதும் அக்கதாபாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்தியிருக்கும் நடிகரும் பாராட்டுக்குரியவர்கள்.

விஜய் ஆண்டனியின் இசையில் ‘புடிக்கல’ பாடல் சூழ்நிலையும் அதைப் படமாக்கிய விதமும் டபுள் புதுமை! பின்னணி இசையிலோ மனிதன் படத்தை இளமைக் கொண்டாட்டமாக வாழ வைத்திருக்கிறார்.

இன்றைய தலைமுறையின் காதல் உலகைச் சரியாக நாடி பிடித்துச் சூழல் நகைச்சுவை மற்றும் போலியற்ற எமோஷனை கதை சொல்லலில் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் இயக்குநர், ஈகோ அன்பை விட வலிமையானது அல்ல அழகான காதல் கவிதையாகத் தந்திருக்கிறார்கள்.

‘பூக்கி’ வறட்டு காதல் கதையல்ல; நியுஜென் காதலர்களின் ‘ஐடென்டிட்டி கிரிஸ்சிஸ்’. காதலிக்கும்போது இருந்த அதே வேகம், காதலை மறக்க முயலும்போதும் இருக்க வேண்டும் என்று துடிக்கும் தற்காலத் தலைமுறையின் காதல் ரகளை. நீங்கள் எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவராக ஒவ்வொரு காட்சியையும் மனம் விட்டு ரசிக்கலாம்.

பூக்கி: திரைப் பார்வை – தற்காலத் தலைமுறையின் ‘பிரேக் அப்’ தாண்டவம்!

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரானை அச்சுறுத்தும் வகையில் 2-வது போர்க் கப்பலை அனுப்ப ட்ரம்ப் திட்டம்
Next Article ‘மை லார்ட்’ விமர்சனம்: ராஜுமுருகன் பேசிய வர்க்க அரசியல் எப்படி?

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,673 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,673 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.