சினிமாவெள்ளித்திரை

புதிய படத்தை தொடங்கிய பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர்

கதிர் நடிப்பில், கடந்த 2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதனைத்தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

படப்பிடிப்பு

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. தற்போது இதன் பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். வாழை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதன் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts