இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் அதிரடிக்காட்டும் ஆம் ஆத்மி…மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆக்கப்பூர்வ திட்டங்கள்!

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பஞ்சாப்பில் முதன்முறையாக ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதைதொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பகவந்த் மான் பல அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவ்வாறான ஒரு திட்டத்தை பற்றி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவில் அவர் கூறியது: பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏ க்களுக்கான ஓய்வூதியத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. இதை பஞ்சாப் மக்களின் நலனுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் ஒருவர் எத்தனை முறை எம்எல்ஏ வாக ஆகி இருந்தாலும் அவர் ஒருமுறை மட்டுமே பென்சன் பெறுவார். மேலும் அவரது குடும்பத்துக்கான அலோவன்ஸ் தொகையும் குறைக்கப்படும்.

முன்னாள் எம்எல்ஏ க்களில் சிலர் ஓய்வூதியமாக ரூ.5.25 லட்சம் வரை பெறுகின்றனர். இது மாநில அரசுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. இதை தடுக்கவே இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ க்கள் உள்பட அரசியல் தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வதாக கூறி இரு கைகளை கூப்பி ஓட்டு கேட்கிறார்கள். ஆனால் மூன்று, நான்கு, ஐந்து முறை வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகி பின்பு தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலோ வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கில் பென்சன் பெறுகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும்.

இந்த புதிய உத்தரவு குறித்து அதிகாரிகளுக்கு வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் எம்எல்ஏவாக பதவி வகித்த ஒருவருக்கு மாதம் ரூ.75 ஆயிரம் பென்சனாக வழங்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு அடுத்தடுத்த காலத்துக்கும் 66 சதவீதம் கூடுதலாக பென்சன் உயர்த்தப்படும் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர்

பஞ்சாப்பின் முன்னாள் முதல்வரும், 11 முறை எம்எல்ஏ வாக பதவிவகித்த சிரோமணி அகாலிதளம் கட்சியின் பார்கஷ் சிங் பாதல், தனது ஓய்வூதியத்தை பஞ்சாப் அரசே சமூக பணிகளுக்கு செலவிட வேண்டும். இல்லாவிட்டால் ஏழைகளின் கல்விக்கு உதவி செய்ய பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts