இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்த விபத்த்தில் 6 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ராணுவ வீரர்கள் பலி
ஜம்முகாஷ்மீர் மாநிலம், அனந்த் நாக் பகுதியில் 39 இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் (BSF) பயணம் செய்த பேருந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அனந்த் நாக் இருக்கே உள்ள பஹல்காம் என்ற இடத்தில் சாலையில் இருந்து விலகி ஆற்றில் விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் 6 வீரர்கள் பலியாகியுள்ளார்கள், மேலும், பலர் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகின்றது.

