தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி !

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

டென்னிஸ் போட்டி

சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படவுள்ளது. செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை சென்னை ஓபன் டபிள்யூ டி ஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையில் 1997 முதல் ஆடவர் பங்கேற்கும் சர்வதேச ஏடிபி டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டி பின்னர் மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது மகளிர் பங்கேற்கும் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இது குறித்து சமிபத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் நுங்கப்பாக்கத்தில் உள்ள மைதானத்தை ஆய்வு செய்தார்.

முன்னதாக சமீபத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு, பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்தது. தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது. நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள போட்டிகளை சோனி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts