விருமன் படத்தின் பாடலாசிரியர் கஞ்சா பூ கண்ணால பாடல் வரிகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாடல் வரிகள்
முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் இடம் பெற்ற ‘கஞ்சா பூ கண்ணால’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றாலும் பாடல் வரிகளில் பெண்ணை கஞ்சாவுடன் ஒப்பிட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
பகிரங்க மன்னிப்பு
இந்நிலையில், அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் மணிமாறன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பெண்ணின் கண்களை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும், கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை. மேலும், பாடலின் வரிகள் கற்பனைக்காக உவமைப்படுத்தப்பட்டது தான் இருப்பினும் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

