இந்தியாசினிமாவெள்ளித்திரை

ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு – ‘பூமர் அங்கிள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் !

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் பூமர் அங்கிள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூமர் அங்கிள்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக மாறியுள்ளார் யோகி பாபு. இவரது காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதன் காரணமாக படங்களில் யோகியை ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர்களும் முன்னணி ஹீரோக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருடன் ரோபோ ஷங்கர் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சுவதீஸ் இயக்குகிறார். போஸ்டரில் ஹல்க் சூப்பர் ஹீரோ போன்று ரோபோ ஷங்கர் தோற்றம் அளிக்கிறார். படத்தில் அவர் மைனர் குஞ்சு என்ற கேரக்டரில் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts