பிரபல நடிகை ராஷி கண்ணா தற்போது வெள்ளை நிற உடையில் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகை
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ராஷி கண்ணா. 2018-ம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. இவர் தொடர்ந்து அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், தற்போது கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ராஷி கண்ணா தற்போது வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Day – dreamer ⭐️ pic.twitter.com/nw4ty7StDf
— Raashii Khanna (@RaashiiKhanna_) August 19, 2022

