மோசமான வானிலை காரணமாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சென்ற ஹெலிகாப்டர் திடீரென்று தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டர்
பீகார் மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் இன்று பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் மோசமான வானிலை ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக முதல்வர் நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் கயா மாவட்டத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும், ஹெலிகாப்டர் திடீரென்று தரையிறக்கப்பட்டதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

