கோத்ரா கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்துள்ளது.
பாஜகவை சாடிய நடிகர்
திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பிலும், சமூக நலன் சார்ந்த பணிகள் மூலம் பலரையும் கவர்ந்தவர் பிரகாஷ் ராஜ். இவர் நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் தனது கருத்தை கூறி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானோ என்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையை கொலை செய்தனர். வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு அண்மையில் விடுவித்தது. இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில், ‘பாலியல் குற்ற வழக்கில் விடுதலையான 11 பேரின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘தலைவர்கள் தங்கப்பதக்கம் வென்றவர்கள் வாழ்த்துவதில் மும்முரம் காட்டும் போது, அவர்களை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்தி வருகின்றனர்’ என பதிவிட்டுள்ளார்.
While Supreme leader is busy congratulating gold medal winners … his men are busy garlanding and felicitating RAPISTS .. is this your #AmritKaal #justasking pic.twitter.com/UrEUcOa3DZ
— Prakash Raj (@prakashraaj) August 19, 2022

