மியான்மர் நாட்டின் மனித உரிமை போராளியான ஆங் சான் சூகிக்கு நில ஊழல் வழக்குகளில் மேலும் கூடுதலாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங் சான் சூகி
மியான்மர் நாட்டின் மனித உரிமை போராளியாக அறியப்படும் 77 வயதான ஆங் சான் சூகி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா விதியை மீறியதாக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தேச துரோக வழக்கில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை என மொத்தம் 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது 2015ல் தனது கட்சி ஆட்சியில் இருந்தபோது, அறக்கட்டளைக்கு கட்டணம் கட்டுவதற்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கினார் என ராணுவம் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி ஆங் சான் சூகிக்கு கூடுதலாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

