கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியேறினால் முழு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
University Grants Commission
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறினாலும், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என யுஜிசி (University Grants Commission) உத்தரவிட்டுள்ளது. ஜே.இ.இ (Joint Entrance Examination Main ) மெயின் உள்ளிட்ட பல நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பலர் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை யு.ஜி.சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சேர்க்கையை ரத்து செய்த மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் எனவும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என யு.ஜி.சி அறிவுறுத்தியுள்ளது. நாடு உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

