தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் , ‘அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை தொடரும். கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் உட்பட இந்தியாவின் தென் மாநிலங்களில் இந்த வாரம் மிக கனமழை நீடிக்கும். இன்று மற்றும் நாளை பெங்களூரில் மிதமானது முதல் கனமழை பெய்யும்.
குறிப்பாக தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்கள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம், அந்தமான், நிக்கோபார் தீவுகள், வடக்கு கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது’ என இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

