கன்னியாகுமரி கடற்கரை மதில் சுவர் மீது நின்று நடனம் ஆடியபடி சிறுவன் தியானம் செய்து தனது இறை பக்தியை வெளிப்படுத்தினர்.
மழையில் தியானம்
கன்னியாகுமரியில் கடந்த ஒரு வரகளமாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளது. ஆனால் இந்த கொட்டுகிற மழையிலும் உள்ளுறை சேர்ந்த 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்க கடற்கரை மதில் சுவரில் நின்று யோகாசனம் செய்தார். சிறுவன் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே மதில் சுவரில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். மழையில் நனைந்து கொண்டே நின்று தியான நிலையில் நடனம் ஆடினார். இதை கண்ட சுற்றலா பயணிகள் பலர் அந்த சிறுவனின் சாகச காட்சிகளை தங்களது செல்போன்களில் படம் பிடித்துக் சமூக தலத்தில் பதிவிட்டனர். அந்த சிறுவனும் மழை நிற்கின்ற வரை அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது யோகாசன சாகசங்களை செய்து கொண்டே இருந்தது சுற்றலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

