தமிழ்நாடு

புதிய ஓய்வூதிய திட்டம்…போராட்டத்தை முன்னெடுக்கும் எதிர்க்கட்சி!

2003 -ல் ஆதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது புதிய ஓய்வூதிய திட்டம். அரசு ஊழியர்களின் பணி காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு அல்லது அவர்கள் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர பென்ஷன் தொகையை நிறுத்திவிட்டு, அரசு ஊழியர்களின் பணி காலம் முடிவடையும் போதே ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செட்டில் செய்துவிடுவதுதான் புதிய ஓய்வூதிய திட்டத்தின் அம்சம்.

இத் திட்டத்தை எதிர்த்து பல்லாயிரம் கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதோடு இன்னமும் பலர் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசும் (2006-2011), அவர்களை தொடர்ந்து இரண்டுமுறை ஆட்சிக்கு வந்த அதிமுக அரசும்(2011-2021) அதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த 2021 தேர்தல் பிரட்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்தது. திமுக அரசு ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த பிரச்சனையை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்துள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதற்காக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அரசு ஊழியர்களுக்கு வருகிற 28, 29 ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தில் தமிழ்நாட்டில் 50 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை துறைவாரியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராமல் போராட்டத்தில் கலந்துகொண்டால் அன்றைய தினம் சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று போக்குவரத்து துறை, மின்சார துறை அறிவித்திருக்கின்றன.

தலைமை செயலாளர்
இது குறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்புவின் அறிக்கை: மார்ச் 28, 29 ஆகிய தேதியில் எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது. விடுப்பு எடுத்தால் 10.30 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.