Editor's Picksதமிழ்நாடு

தகுதியற்ற நபர் ; அண்ணாமலையை விளாசிய பழனிவேல் தியாகராஜன்!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தகுதியற்ற நபரென காட்டமாக விமர்சித்துள்ளார் நிதியமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னணி தலைவர்களுள் ஒருவருமான பழனிவேல் தியாகராஜன்.

தமிழக சட்டப்பேரவையில் 2022 – 23 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மேற்படிப்பிற்கு செல்லும் சமயத்தில் அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. அரசின் இந்த நிதிநிலை அறிக்கையானது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றிருந்தது.

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, தமிழக நிதிநிலை அறிக்கையை விமர்சித்ததோடு மட்டுமல்லால் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தினார்.

இந்நிலையில், அண்ணாமலையின் விமர்சனம் குறித்து பதிலளித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தகுதியற்ற நபர்களின் கருத்துக்களுக்கு நான் ஒருபோதும் பதிலளிக்க விரும்புவதில்லை. நிதிநிலை அறிக்கை குறித்து அவருக்கு ஏதேனும் சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் இருக்குமேயானால் அண்ணாமலை நீதிமன்றத்தை நாடட்டும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்புவதாக பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts