சமூகம்தமிழ்நாடுவிவசாயம்

இயற்கை உரம் என கூறி களிமண் விற்பனை !

தூத்துக்குடி அருகே இயற்கை உரம் என கூறி களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

களிமண்ணை விற்பனை 

தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியில் ஒரு கும்பல் டிஎபி உரத்திற்கு இணையாக எங்களிடம் இயற்கை கடல் பாசி உரம் இருப்பதாக கூறி 50 கிலோ மூட்டைகளை வாகனமூலம் விவசாயிகளிடம் விற்பனை செய்துள்ளனர். 1300 ரூபாய் கொடுத்து வாங்கிய விவசாயிகள் உள்ளே பிரித்து பார்த்த போது உள்ளே களிமண் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். மேலும், விற்பனை செய்த நபர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அனைத்து உரங்களும் ‘ஒரே நாடு ஒரே உரம்’ என்ற மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts