ஆன்மீகம்இந்தியாசமூகம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை – பிரதமர் மோடி வாழ்த்து !

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘விநாயகர் சதுர்த்தி நன்னாளில் கருணை மற்றும் சகோதரத்துவம் எப்போதும் மேலோங்கட்டும். ஞானம் என்பது முக்தியை விரும்புபவருக்கு அறியாமையை அழிப்பதாகும். செல்வம் பக்தனுக்குத் திருப்தி அளிக்கிறது. யாரிடமிருந்து தடைகள் அழிகிறதோ, யாரிடமிருந்து காரியம் நிறைவேறுகிறதோ, அந்த விநாயகரை எப்போதும் கும்பிட்டு வணங்குகிறோம். விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகப் பெருமானின் அருள் எப்போதும் நம் மீது இருக்கட்டும்’ என தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Related posts