ஆன்மீகம்இந்தியா

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு – விநாயகர் சிலைகள் கண்காட்சி !

தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது.

சிலை கண்காட்சி

விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் பலவிதமான வடிவங்களில் சிலைகள் வைத்து இந்து மதத்தினர் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுடன் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் சுமார் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி இன்று முதல் சுமார் 12 நாட்கள் நடைபெறுகிறது. ஒரே இடத்தில் காணப்படும் ஏராளமான விநாயகர் சிலைகளை காண பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தருகின்றனர்.

Related posts