சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுபயணம்

மேட்டூர் அணையில் உபரி நீர் வெளியேற்றம் – தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் தீவிரம் !

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களின் 3 குழுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட விரைந்தனர்.

உபரி நீர் வெளியேற்றம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள முன்னெச்சரிக்கை மீட்பு பணிகளில் ஈடுபட அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிருந்து 75 வீரர்கள் 3 குழுக்கள் மீட்பு படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts