சமூகம்தமிழ்நாடுவணிகம்

கோவில்பட்டியில் 45 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் !

கோவில்பட்டியில் மினி வேனில் கடத்திய 45 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல் 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் நேற்று பசுவந்தனை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி போலீசார் தடுத்து நிறுத்திசோதனை ஈட்டன. சோதனையில் ஈடுபட்டபோது மினி லாரியில் இருந்த டிரைவர் உள்பட 2 நபர்கள் தப்பியோடியுள்ளனர். அந்த மினி லாரி தலா 50 கிலோ எடை கொண்ட 45 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. மினி வேனுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது ? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மினி வேனில் இருந்து தப்பி ஓடிய 2 நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts