சென்னையில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
வெட்டி கொலை
மதுரவாயல் அருகே மந்தைவெளி தெருவில் ரவுடி ராஜ்குமார் (28) வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மந்தைவெளியில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி ராஜ்குமாரை முன்விரோதம் காரணமாக 2 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் திருவேற்காட்டில் கடந்த ஆண்டு சண்முகம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளி ராஜ்குமார் என தெரிய வருகிறது. ராஜ்குமார் கொலையில் தொடர்புடைய பிரகாஷ், கண்ணன், உள்பட 4 பேரை கோயம்பேடு போலீசார் தீவீரமாக தேடி வருகின்றனர்.

