காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உடல்நல குறைவால் ஏற்பட்ட ராஜஸ்தான் வருகையை இன்று ரத்து செய்துள்ளார்.
ராகுல் காந்திக்கு உடல்நல குறைவு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் ஆல்வார் நகருக்கு இன்று வருகை தர திட்டமிட்டு இருந்தார். அங்கு அவர் கட்சியின் நேத்ராத்வ சங்கல்ப சிவிர் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ள காரணத்தால் தனது ராஜஸ்தான் வருகையை அவர் இன்று ரத்து செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ராகுல் காந்தியின் சகோதரி மற்றும் கட்சி பொது செயலாளரான பிரியங்கா காந்திக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கட்சியின் தொண்டர்கள் சிறிது கழகத்தில் உள்ளனர்.

