தென் கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் 7 பேர் பலியாகியுள்ளனர்.
7 நபர்கள் பலி
தென் கொரியா நாட்டில், சியோல் மாகாணத்தில் பெய்த கனமழைக்கு வீடுகள், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் சுரங்கப் பாதை, ரயில் நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதில் 6 பேர் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சியோலின் சில பகுதிகள் மேற்கு துறைமுக நகரமான இன்சியோன் மற்றும் தலைநகரைச் சுற்றியுள்ள கியோங்கி மாகாணத்தில் திங்கள்கிழமை இரவு நேரத்தில் 100 மி.மீ அதிகமான கனமழை பெய்ததாக செய்தி நிறுவனம் ஓன்று தெரிவித்துள்ளது. கியோங்கியில் ஒன்பது நபர்கள் படுகாயமடைந்தனர். மேலும், தலைநகர் பகுதியில் உள்ள 107 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் தங்கள் வீடுகளை இழந்து பள்ளிகள் மற்றும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. தென் கொரியா உள்ள அதிகமான ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் சில பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளன.

