ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற தமிழக அரசு தயங்குவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்கொலை
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் தற்கொலை அதிகரித்துள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பி.காம் படித்த சுரேஷ் என்ற வாலிபர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகியுள்ளார். இதனால் வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் நண்பர்களிடம் வாங்கிய பணம் என்று சுமார் 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அறிக்கை
இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசரச் சட்டம் கொண்டு வர பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த 15 மாதங்களில் 28 பேர் பலியான பிறகும் திமுக அரசு தொடர்ந்து அமைதி காப்பது ஏன்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?https://t.co/2UpG9wiDcJ@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/s2JIc4MTlc
— சீமான் (@SeemanOfficial) August 5, 2022

