மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தூத்துக்குடி ஆட்சியருக்கு விருது வழங்கப்படுகிறது.
ஆட்சியருக்கு விருது
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை நடக்க இருக்கிறது. விழாவில் தமிழகத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும், 3 காவல் கண்காணிப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விருதுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தேர்வு செய்யப்பட்டுயுள்ளார். அவர் மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேற்கொண்ட முயற்சிகள், மனித உரிமை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தியது, புகார் மீதான நடவடிக்கை மேற்கொண்டது உள்ளிட்டவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்த விருதை வழங்கவுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

