இன்று டெல்லியில் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்தார்.
மம்தா பானர்ஜி சந்திப்பு
டெல்லியில் ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் மம்தா பானர்ஜி சென்று சந்தித்தார். இந்த சந்திப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, மேற்குவங்கலத்தின் பொருளாதார தேவை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொடர்ந்து மம்தா பானர்ஜி இன்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளார்.

