உலகம்

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய நாட்டு விமானியின் வீடியோ; எப்பதான் முடியும் போர்!

ரஷ்யா நடத்தும் உக்ரைன் மீதான போர் என்பது குற்றம் நிறைந்தது என ரஷ்ய விமானி ஒருவர் தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

நேட்டோ அமைப்போடு உக்ரைன் இணையக்கூடாது என்று பலவருடங்களாக வலியுறுத்திவந்த ரஷ்யா கடந்த பிப்.24 அன்று வெளிப்படையாக உக்ரைன் மீது போரைத்தொடங்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரிக்கும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி தகர்க்கப்படுகிறது. ரஷ்சியாவின் சக்திவாய்ந்த ராணுவ அமைப்பை உக்ரைனின் ராணுவத்தோடு இணைந்து உக்ரைனிய மக்களும் துணிச்சலாக எதிர்கொண்டாலும் பாதிப்பும் உயிரிழப்பும் உக்ரைனுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல்லாயிரம் கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும் உறவுகளையும் விட்டுவிட்டு உயிரைக்காக்க நாட்டைவிட்டு வெளியேறும் அவலம் நிகழ்கிறது.

பேச்சுவார்த்தை
இது தொடர்பாக இரு நாட்டினருக்கு இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. கடந்த மார்ச் 10ஆம் தேதி இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் துருக்கியில் சந்தித்துப் பேசினர். இந்த பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பல ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகள் விதித்தபோதும், எதிர்ப்பு குறல்களை பதிவுசெய்தபோதும் ரஷ்யா எதையும் கண்டுகொள்ளவில்லை.


ரஷ்ய விமானியின் வீடியோ
ரஷ்ய விமானி ஒருவரின் உக்ரைனுக்கு ஆதரவான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது. அதில் அவர் உக்ரனிய மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அந்த வீடியோவில் , “மக்களே, உக்ரைனில் போர் என்பது ஒரு குற்றம். அறிவார்ந்த மக்கள் அனைவரும் இந்த விஷயத்தில் என்னுடன் உடன்படுவார்கள் என நினைக்கிறேன். இந்தப் போரைத் தடுக்க நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். ரஷ்யா நடத்தும் உக்ரைன் மீதான போர் என்பது குற்றம். ரஷ்யா உடனே இந்த போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் ” என்று ரஷ்ய விமானி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

Related posts