Editor's Picksஉலகம்வணிகம்

தடைகளை அதிகரிக்கும் அமெரிக்கா ; தப்பமுடியாத நெருக்கடியில் ரஷ்யா!

நேட்டோ அமைப்பில் சேர கூடாதென கூறி உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே, பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரம் மற்றும் கட்சா எண்ணெய் இறக்குமதி போன்ற தடைகளை விதித்துள்ள நிலையில், அமெரிக்கா தன் கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வோட்கா, கடல் உணவு, ஆடம்பர பொருட்கள், வைரம் உள்ளிட்ட பல வர்த்தகங்களுக்கு தடை விதித்துள்ளது.

ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் ரஷ்யா பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள் ரஷ்யாவின் சம வர்த்தக கூட்டாளி என்ற அந்தஸ்த்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ரஷ்யா பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்படும்.

அமெரிக்கா விதித்துள்ள இந்த தடைகள் வருடத்திற்கு 550 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷ்யா மீதான அமெரிக்காவின் நெருக்கடிகள் இதோடு முடிய போவதில்லை; தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் எனவும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கரன்சி மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சர்வதேச நிறுவனங்கள் பல ரஷ்யாவை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நடவடிக்கையினால் ரஷ்யாவின் வருவாயில் 1 பில்லியன் டாலருக்கும் மேலாக இழப்பு ஏற்படலாம். இதன் விளைவாக ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

Related posts