திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் 27ல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது .
சுமார் 4ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

