அரசியல்தமிழ்நாடு

நெல்லையில் அ.ம.மு.க பிரமுகர் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி கொலை ..!

நெல்லை பாளையங்கோட்டையில் அமமுக பிரமுகர் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவைகுண்டம்

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(40). இவர் பாளையங்கோட்டையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் பழைய கார்களை உடைத்து விற்பனை செய்தும் தொழில் செய்துவருகிறார்.

அ.ம.மு.க நிர்வாகி

கருங்குளம் ஒன்றிய பகுதியில் அ.ம.மு.க நிர்வாகியான இவர் பாளையங்கோட்டையில் உள்ள குலவணிகர்புரத்தில் உள்ள குடியிருப்பில் வளாகத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வீட்டிற்குள் நடந்து சென்ற அவரை சரமாரியாக துடி துடிக்க வெட்டி விட்டு தப்பியோடியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் பலியானார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு தொடர்பாக கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் கொலையாளியை தேடிவருகின்றனர். மேலும் குலவணிகர்புரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

Related posts