பாஜக பிரமுகர் ஒருவர் கட்டாய திருமணம் செய்துகொள்ள கோரி மிரட்டியதால், இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்
திண்டுக்கல் குடை பாறைப்பட்டி பகுதி பெரியாண்டவர் நகரைச் சேர்ந்தவர் மனிஷா (25). இவர் சட்டம் படித்தவர். இவருக்கும் குமரேசன் என்பவருக்கும் திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன் குமரேசன் இறந்துவிட்டார். மனிஷா தன் பெண் குழந்தையுடன் தன் பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்து விட்டார்.
பாஜக பிரமுகர்
இந்நிலையில், திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். தான் குமரேசனின் சகோதரர் என்று பொய் சொல்லி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனிஷாவை கடந்த இரண்டு வருடமாக தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளார்.
கட்டாயத்திருமணம்
மேலும், அந்த பெண்ணையும் அவளது குடும்பத்தினரையும் தனது கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு வகையில் மிரட்டல் விடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து காவல்நிலையத்தில் அந்த குடும்பத்தினர் மீது பொய் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சி
இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான மனிஷா விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கிக்கிடந்த மனிஷாவை அவரத்தின் உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்பொழுது மனிஷாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கட்டாய திருமணம் மற்றும் தங்கள் மீது பொய் புகார் கொடுத்து மிரட்டல் விடுத்துவரும் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனிஷாவின் சகோதரி சீமாதேவி கோரிக்கை வைத்துள்ளார்.