தமிழ்நாடு

இந்தியாவில் மிக பெரிய தங்க செயின் – வரிச்சூர் செல்வத்தின் ஆசை !

இந்தியாவில் மிக பெரிய முறுக்கு தங்க செயினை அணிந்து அதிரடி காட்டியுள்ளார் வரிச்சூர் செல்வம்.

வரிச்சூர் செல்வம்

மதுரை மாவட்டம் வரிச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் மீது பல கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் உள்ளன. தற்போது இவர் கட்டப்பஞ்சாயத்து ரவுடிசம் உள்ளிட்டவைகளில் இருந்த விலகி விட்டதாகவும் வட்டிக்கு விடும் தொழில் மற்றும்
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இவர் நடமாடும் நகை கடை என்று பலரால் அறியப்படுபவர்.

இவர் தங்க நகை அணிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நகை அணிந்துகொண்ட சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவார். சமீபத்தில் கூட உடல் முழுவதும் தங்க நகை அணிந்து கொண்ட இவர் பதிவிட்ட புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இவர் அணியும் அனைத்தும் தங்க நகைகள் அதிக எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

முக கவசம்

கொரோனா காலத்தில் கூட உடல் முழுவதும் தங்கத்தை அணிந்து கொண்டு முக கவசம் மட்டும் அணிந்து வந்தார். அவரின் உடல் முழுவதும் உள்ள தங்க நகை மதிப்பு சுமார் 250 பவுனாகும். சிறிது நாட்களுக்கு பின் 10 பவுன் தங்கத்திலான முகக்கவசத்தை அணிந்து வலம் வந்தார். இவர் அணியும் நகைகள் எல்லாம் பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்டுகின்றன.

100 பவுன் முறுக்கு செயின்

தற்போது வரிச்சூர் செல்வம் இந்தியாவிலேயே மிக பெரிய 100 பவுன் தங்கத்திலான முறுக்கு செயின் ஓன்று அணிந்து உள்ளார். இதனால் அவர் இந்தியாவில் மிக பெரிய தங்க செயின் வைத்திருப்பவர் என்ற பெருமையை வரிச்சூர் செல்வம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். படையப்பா படத்தில் வரும் காரை 1990களிலேயே எனது தந்தை வைத்திருந்ததாக கூறினார். என்னை அனைவரும் ரவுடி என்று கூறுகிறார்கள். ஆனால் நான் எப்போதும் தனித்து தான் இருப்பதாகவும் நான் ரவுடி இல்லை’ என்றும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் காஞ்சி அத்திவரதர் தரிசிக்க வந்த அவருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்றது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts