இன்று கூடிய பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸை புதிய தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில செயற்குழு கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் பா.ம.க தலைவர் ஜி.கே. மணி தலைமையில் இன்று சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸில் நடைபெற்றது. அதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பேராசிரியர் தீரன், தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே. மூர்த்தி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளார்.
தீர்மானம்
இதில், பாமகவின் தற்போதைய இளைஞரணி தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸை பாமகவின் தலைவராக தேர்வு செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பாமக கட்சியின் தற்போதைய தலைவர் ஜி.கே. மணி வாசித்தார். மேலும், சோம்நாத் சட்டர்ஜி, ஐ நா தலைவராக இருந்த பான் கி மூன் போன்ற உலக நாடுகளின் தலைவர்களால் பாராட்டப்பெற்றவர் அன்புமணி ராமதாஸ் என்றும் ஜி.கே மணி குறிப்பிட்டார்
ஜி.கே. மணி
தொடர்ந்து பேசியவர், மருத்துவ படிப்பிற்காக அகில இந்தியா தொகுப்புகளில் பட்டியலின மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நிதியை காத்தவர் அன்புமணி ராமதாஸ். கட்சியின் வளர்ச்சியை அவர் புதிய உயரத்துக்கு எடுத்து செல்வார் என தற்போதைய தலைவர் ஜி.கே. மணி பேசியுள்ளார்.
மருத்துவர் ராமதாஸ்
செயற்குழு கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ் அன்புமணிக்கு ராமதாசுக்கு வாழ்த்துக்கள் கூறினார். மேலும், யாரு ஒருவர் எனக்கு பதவி எதுவும் வேண்டாம் என்னால் 100 வாக்குகள் வாங்கி அன்புமணி ராமதாசை முதல்வர் ஆக்குபவன் தான் உண்மையான தொண்டன் என்று பேசியுள்ளார்.
2026-ல் பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் சமீபகாலமாக அம்புமணி ராமதாஸ் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.