Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»இளைஞர்கள் சாபம் திமுகவை சும்மா விடாது: அன்புமணி

இளைஞர்கள் சாபம் திமுகவை சும்மா விடாது: அன்புமணி

February 15, 20263 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம் என்று திமுக கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றவில்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, “திமுக அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்றத் தவறியதும், வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்த துரோகத்தை ஒப்புக்கொள்வதும் கண்டிக்கத்தக்கவை.

அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,‘‘திமுக ஆட்சியில் இதுவரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 45,126 பேர், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 24,927 பேர், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 12,894 பேர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 11,244 பேர், என மொத்தம் 94,191 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்திருக்கிறார்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் 3.50 லட்சம் பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் (வாக்குறுதி எண்:187), 4 வகையான பணிகளை மேற்கொள்ள 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் (வாக்குறுதி எண்:188,189, 190,191)’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், வெறும் 94,191 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டிருப்பது திமுக அரசின் தோல்வி மட்டுமல்ல, தமிழக இளைஞர்களுக்கு திட்டமிட்டு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகமும் ஆகும்.

இதையும் படிக்க :  மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி: இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தகவல்

திமுக அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையும் தாண்டி, இயல்பாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட செய்யவில்லை என்பது தான் பெரும் துரோகம். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த காலியிடங்கள் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படியானவையாகும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐந்தாண்டுகளில் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கக் கூடும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றாலும், புதிதாக ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலியிடங்களையாவது திமுக அரசு நிரப்பியிருக்க வேண்டும்.

ஆனால், புதிதாக ஏற்பட்ட காலியிடங்களில் பாதி கூட நிரப்பப்படவில்லை என்பதிலிருந்தே திமுகவின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையிலான வித்தியாசம் ஆர்க்டிக் துருவத்திற்கும், அண்டார்டிகா துருவத்திற்கும் இடையிலான தொலைவை விட அதிகம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்த இளைஞர்களுக்கு ஐந்தாண்டுகளில் திமுக செய்தது துரோகம், துரோகம், துரோகம் மட்டுமே.

அதேபோல், தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப் படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை 5 லட்சம் வேலைவாய்ப்புகளைக்கூட வழங்கவில்லை. வழங்கப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் கூட தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை; மாறாக அவை பிற மாநில இளைஞர்களுக்குத் தான் தாரைவார்க்கப்பட்டன. இதற்கு வசதியாகவே, தமிழக தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்ற இன்னொரு வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

இதையும் படிக்க :  சிக்கினார் கஞ்சா கடத்தல் பாண்டியம்மாள், 50 கிலோ கஞ்சா பறிமுதல்!

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ஒரு கோடியே 30 லட்சத்திற்கும் கூடுதலான படித்த இளைஞர்கள் அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற கவலையோ, அக்கறையோ திமுக அரசுக்கு இல்லை. கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு அக்கறை காட்டியதெல்லாம் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றில் மட்டும் தான். திமுகவின் இந்த ஊழல் பசியாலும், துரோகத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள் தான்.

அரசு வேலைகளை எதிர்பார்த்துக் காத்திருந்த இளைஞர்களுக்கு மட்டுமல்ல… அரசுத்துறை பணிகளில் ஏற்கனவே சேர்ந்து விட்டவர்களுக்கும் திமுக அரசு பரிசளித்தது துரோகத்தை மட்டும் தான். இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு, பகுதி நேர பணியாளர்களுக்கு பணி நிலைப்பு, ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், சத்துணவு & அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு என அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இதுவரை திமுக நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்த அரசுகளிலேயே மனசாட்சியும், மனிதநேயமும் இல்லாத ஆட்சி என்றால் அது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான். மாணவர்கள், படித்த இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் திமுக ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை ஏமாற்றிய, துரோகம் செய்த திமுக அரசுக்கு எதிரான அவர்களின் சாபம் இந்த ஆட்சியை வீழ்த்தும்” என தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழ்நாட்டில் பிப்.23-இல் இறுதி வாக்காளர் பட்டியல் – தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
Next Article நடிகர் விஜய் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும்: நடிகர் சசிகுமார்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.