அரசியல்இந்தியா

இந்தியாவின் தேசிய மொழியை கண்டறிய ஒரு வழியுள்ளது ! – மம்தா பானர்ஜி புது ஐடியா

இந்தியாவின் தேசிய மொழியை கண்டறிய ஒரு வழியுள்ளது ! – மம்தா பானர்ஜின் புது ஐடியா

இந்தி தேசிய மொழியா? இல்லை? என்பது குறித்து எளிதாக தீர்வு கண்டு விடலாம் என மம்தா பானர்ஜி ஒரு புதிய ஆலோசனை கூறியுள்ளார்.

தேசிய மொழியா இந்தி

கடந்த பல வருடங்களாக இந்தியாவின் தேசிய மொழி இந்தி தான் என்றும், இந்தி இல்லை என்றும் வாக்குவாதம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்தி வெறும் அலுவலக மொழி தானே தவிர, தேசிய மொழி இல்லை என்ற வாதமும் உண்டு. இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்களும், சட்ட நிபுணர்களும் தங்களின் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்த வந்தனர்.

அரசியல் கட்சிகள்

மத்தியில் தங்களை மிக பெரும் கட்சிகள் என சொல்லக்கொள்ளும் கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால், இந்தி பேசாத மாநிலங்கள் மீது தொடர்ந்து இந்தியை திணிக்கும் விதமாக தான் செயல்பட்டு வந்துள்ளது. மேலும், இந்தி திணிப்பை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்துள்ளது.

அமித் ஷா கருத்து

சமீபத்தில் 37வது அலுவல மொழி ஆணைய கூட்டத்தில் அமித் ஷா, ”அந்நிய மொழியான ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தி மொழியே மாநிலங்களுக்கு இணைய மொழியாக பயன்படுத்தலாமே’ என்று பேசி இருந்தார்.

இது இந்திய முழுவதும் மிக பெரிய சர்ச்சையானது. பாஜக மறுபடியும் இந்தியை திணிக்க நினைக்கிறதா என்ற கேள்விகளை பல தரப்பினர் பாஜகவை நோக்கி எழுப்பினர்.

சினிமாவிலும் மொழி பஞ்சாயத்து

அந்த சலசலப்பு அடங்குவதற்குள் கன்னட நடிகர் சுதீப்பும், இந்தி நடிகர் அஜய் தேவ்கனும் இந்தி சினிமாவையும், தென்னிந்திய சினிமாவையும் வைத்து ட்விட்டரில் விவாதம் செய்து கொண்டு இருந்தனர்.

இந்த விவாதத்தின் தொடக்க புள்ளி இந்தி தேசிய மொழி இல்லை என சுதீப் சொன்னது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Stop Hindi Imposition

இதற்கிடையில், இன்று காலை உத்திரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், ‘இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு நாட்டிற்கு செல்லுங்கள்’ என்று கூறிருந்தார். இந்த கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.

இதனால் இன்று மீண்டும் #StopHindiImposition என்ற ஹாஷ்டாக் மீண்டும் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

மம்தாவின் ஐடியா

இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பானர்ஜி முதன்முதலாக கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த மம்தா, ‘ இந்தி தேசிய மொழியா என்பது குறித்து மக்களிடம் தான் வாக்கெடுப்பு நடத்தவேண்டும். இந்திய பல மொழிகளையும், பல விதமான கலாச்சாரங்களையும் உள்ள அடைக்கியது.

அதனால் இங்கு ஒரு மொழியே தேசிய மொழி என்று எந்த மொழியையும் சொல்லுவது தவறு. இது குறித்து மற்ற மாநில முதல்வர்களோடு கலந்துரையாடி விட்டது தான் எதையும் சொல்ல முடியும்’ என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த வாக்கெடுப்பு ஐடியாவை தான் இன்று அரசியல் வட்டாரத்தில்பேசி வருகின்றனர்.

Related posts