‘இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ – பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து!
உத்திரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், ‘இந்தி தெரியாதவர்களை வெளிநாட்டவர் என்றே கருதப்படுவார்கள். இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு நாட்டில் சென்று வாழுங்கள்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தி எதிர்ப்பு
இந்தியா முழுவதும் இந்தியை கொண்டுவர பல முறை இந்தி பேசும் ஆட்சி அதிகாரத்தை கொண்ட கட்சிகள் முயற்சித்து கொண்டே இருக்கிறது. அதிலும் தமிழகத்தில் இந்தியை திணிக்க பல முயற்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டது.
ஆனால், அதை எதிர்த்து 1937 – 39 வரை தமிழகத்தில் மிக பெரிய போராட்டங்கள் நடந்தது. அதன் விளைவாக இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடம் என்ற அரசாணை திரும்பப்பெற்றது அன்றே சென்னை மாகாணம் (Madras Presidency).
அதேபோல் 1965ம் ஆண்டும் இந்தியை எதிர்த்து தமிழகத்தில் மிக பெரிய போராட்டம் நடைபெற்றது. அந்த எழுச்சி உணர்ச்சி இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாட்டு தான் ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹாஸ்டாக் எல்லாம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. ஆனால் இப்போது எல்லா மாநிலங்களும் இந்தி திணிப்பை எதிர்த்து வருகின்றனர்.
சினிமா நட்சத்திரங்கள் மோதல்
சினிமா நட்சத்திரங்கள் அவ்வவ்போது இந்திக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவார்கள்.
அதுபோலதான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப், ‘இந்தி இனி தேசிய மொழி இல்லை.
இந்தி திரைப்படங்களும் மற்ற மொழிகளியும் டப்பிங் செய்து வெளிட்டப்படுகிறது. ஆனால் அவை பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் மற்ற மொழி படங்கள் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுகிறது’ என்றார்.
சுதீப்பின் கருத்துக்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மேலும் மற்ற மொழி படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்து வெளியிட்டுகிறீர்கள். இந்தி தான் இன்றும், என்றும் நமது தாய் மொழியாகவும், தேசிய மொழியாகவும் இருக்கும் என்றார்.
ஒருவருக்கொரு பதிலுக்குப்பதில் சொல்லிக்கொண்டே போக சமூக வலைத்தளத்தில் மீண்டும் இந்தி எதிர்ப்பது தொடங்கியுள்ளது.
அமைச்சர் கருத்து
சில நாட்களுக்கு முன் அமித் ஷா, ‘ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை மாநிலங்களுக்குள் இணைப்பு மொழியாக பயன்படுத்தலாம்’ என்று கூறிய கருத்து மிக பெரிய விவாத்திற்குள்ளானது.
இந்நிலையில் உத்திரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர், ‘இந்தியாவில் வசிக்க விரும்புவார்கள் நிச்சயம் இந்தி மொழியை நேசித்தே ஆகவேண்டும். இந்தி தெரியாதவர்கள் வெளிநாட்டவர் என்றும், வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்ப்பு வைத்து இருப்பர் என்றே கருதப்படுவார்கள். மேலும், மற்ற மொழிகளை நேசிக்கும் உங்களுக்கு சொல்லிக்கொள்வது, இந்தி தான் முதலாவது பிறகு தன அந்நிய மொழி என்றார்.
நாட்டை விட்டு வெளியேறுங்கள்
கடைசியாக அவர், ‘இந்தியை எதிர்பரவர்களும், இந்தி பேச தெரியாதவர்களும் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு நாட்டிற்கு சென்று வாழுங்கள்’ என்று தன் பேச்சின் மூலம் இந்தி திணிப்பை காட்டியுள்ளார்.
இவரத்தின் கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் எதிர்ப்பை தெரிவித்தது மட்டுமின்றி #stophindiimposition என்ற ஹாஷ்டாக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.