சமூகம்தமிழ்நாடு

குடும்பம் தகராறில் மாமனாரை வெட்டிக்கொலை செய்த மருமகன் !

தனது மனைவி குடும்ப நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த சிவஞானபுரம் ஊராட்சியில் உள்ள வாகைத்தாவூர். இந்த ஊர் கீழத் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (65) மகன் மந்திரம், மனைவி முத்துலட்சுமி மற்றும் மகள் ஜெயா. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தர்மர் மகன் சந்தனகுமாருக்கும் (36) மந்திரம் மகள் ஜெயாவுக்கும் கடந்த சில ஆண்டு முன் திருமணம் நடந்துள்ளது.

kovilpatti
Kovilpatti
பால் வியாபாரி

சந்தனகுமார், ஜெயா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தொடக்ககாலத்தில் விவசாய கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த சந்தனகுமார், மதுவிற்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவி ஜெயா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார் சந்தனகுமார். அதனால் ஜெயா தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையே தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சந்தனகுமார் அழைத்தும் ஜெயா மறுத்து விட்டார். மேலும் மந்திரம், சந்தனகுமாரை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

வாகைத்தாவூர்
வாகைத்தாவூர்
மாமனாருக்கு வெட்டு

இந்நிலையில், நேற்று மாலையில் பால் பண்ணையில் பாலை ஊற்றிய பின்னர் மந்திரம் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரது மருமகன் சந்தனக்குமார் வழிமறித்து, தனது மனைவி ஜெயாவை குடும்ப நடத்த அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். தினமும் குடித்து விட்டு தனது மகளை சித்தரவதை செய்தால் எப்படி வாழ முடியும், எதுவாக இருந்தாலும் தனது மகள் முடிவுதான் தன்னுடைய முடிவு என்று மந்திரம் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சந்தனக்குமார் தனது மாமனார் மந்திரத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்கு வாதம் முற்றவே சந்தனக்குமார் தான் வைத்திருந்த அரிவாளால் மந்திரத்தை வெட்டி விட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்தில் மந்திரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துதுள்ளனர். மந்திரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து சந்தனகுமாரை தேடிவருகின்றனர்.

இதனால், மனைவி குடும்ப நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kayathar
KAYATHAR POLICE STATION

Related posts