நெல்லையில் இன்று நடைபெற்ற பிரமாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
நலத்திட்ட உதவிகள்
நேற்று காலை 9.15 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நெல்லை திரும்பிய அவர் இன்று காலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறைவடைந்துள்ள 5 பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அந்த பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

