சினிமாவெள்ளித்திரை

அமீர்கான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் !

அமீர்கான் நடித்த லால்சிங் சத்தா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ்

1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) என்ற ஆங்கில படத்தை தழுவி தற்போது ஹிந்தியில் வெளியான திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. இத்திரைப்படத்தில் அமீர்கான் கரீனா கபூர், நாக சைத்தன்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அத்வைத் சந்தன் இயக்கியிருந்த இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. இதனால் அமீர்கான் தனது சம்பளத்தை வாங்காமல் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், லால்சிங் சத்தா படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Related posts