லிரிக்ஸ் வீடியோ
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
ட்ரெண்டிங்
இந்நிலையில், நானே வருவேன் படத்தின் முதல் பாடலின் லிரிக்ஸ் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. ‘வீரா சூரா’ என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலை இயக்குனர் செல்வராகவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Like the KING 👑 ruling hearts in style! 🏹#VeeraSoora TRENDING with 2️⃣.5️⃣M+ real-time views!
A @thisisysr Musical 🎶@dhanushkraja @selvaraghavan @theVcreations @omdop @Rvijaimurugan @saregamasouth pic.twitter.com/BFB63ZkzQb
— selvaraghavan (@selvaraghavan) September 8, 2022
