பிரதமர் மோடி
கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை யொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் வாழ்த்து
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘அனைவருக்கும், குறிப்பாக கேரள மக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள். இந்த திருவிழா இயற்கை அன்னையின் முக்கிய பங்கையும், கடின உழைப்பாளி விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஓணம் நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை அதிகரிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ഏവർക്കും, പ്രത്യേകിച്ച് കേരളത്തിലെ ജനങ്ങൾക്കും ലോകമെമ്പാടുമുള്ള മലയാളി സമൂഹത്തിനും ഓണാശംസകൾ. ഈ ഉത്സവം പ്രകൃതി മാതാവിന്റെ സുപ്രധാന പങ്കിനെയും നമ്മുടെ കഠിനാധ്വാനികളായ കർഷകരുടെ പ്രാധാന്യത്തെയും വീണ്ടും ഉറപ്പിക്കുന്നു. ഓണം നമ്മുടെ സമൂഹത്തിൽ ഐക്യത്തിന്റെ ചൈതന്യം വർദ്ധിപ്പിക്കട്ടെ.
— Narendra Modi (@narendramodi) September 8, 2022