அரசியல்தமிழ்நாடு

மேகதாது விவகாரம் தமிழக உரிமை நிலை நாட்டப்படும் – அமைச்சர் துரைமுருகன் உறுதி !

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது  என ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள சேனூரில் பகுதி நேர நியாயவிலை கடை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பகுதி நேர நியாயவிலை கடையை திறந்து வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 minister duraimurugan collector kumaravel pandian
minister duraimurugan collector kumaravel pandian
செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை விவகாரம் குறித்து காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வருகிற 17ம் தேதி நடைபெறவுள்ளது. மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இது தவறானது, பல முறை ஆணையத்திற்கு விவாதிக்க அதிகாரம் இல்லை என ஆணையம் கூறியது, தற்போது ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என கூறுவது கண்டிக்கத்தக்கது.

இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். மத்திய அரசு ஆதரவு இல்லாமல் இவர்கள் பேச மாட்டார்கள். இதில் மத்திய அரசின் சூழ்ச்சி உள்ளது. மேகதாது விவகாரம் குறித்து காவேரி மேலாண்மை ஆணையம் விவாதித்தால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும்’ என கூறினார்.

kaveri river
Cauvery river
ஆன்லைன் சூதாட்டம்

தொடர்ந்து பேசிய அவர், ‘ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நதிகள், ஆறுகள், குளங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை நீர் வளத்துறை அதிகாரிகள் முலமாக கணக்கீடு செய்கிறோம். நீர்நிலை குறித்து முழுமையான ஆய்வுக்கு வந்தால் அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆக்கிரமிப்பு யார் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Related posts