மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் உயிருடன் எரிக்கப்பட்டார்.
நிலத்தகராறு
மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் உயிருடன் எரிக்கப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். ரேம் பியாரி என்ற பழங்குடி பெண் உடலில் தீ வைத்து கருகிய நிலையில் தமது வயலில் கிடந்ததாக அவர் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அரசு நலத்திட்ட உதவி மூலமாக கிடைத்த நிலத்தை சிலர் அபகரிக்க முயன்றவர்கள் இவ்வாறு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி 3 நபர்களை கைது செய்து மேல் விசாரணை செய்துவருகின்றனர்.
மேலும், நிலத்தகராறு காரணமாக பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பரபரப்பட்டு வருகிறது.சிலர் இதுகுறித்து கருத்து கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.